Categories
உலக செய்திகள்

விடாது எரியும் காட்டுத் தீ…. நடுவே ஒருவர் செய்த சர்ச்சைக்குரிய செயல்….. கைது செய்த காவல்துறையினர்….!!

கனடாவின் மலைக்குன்றில் வேணுமென்றே தீ வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கனடாவின் சில பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு Kelowna மலைப்பகுதியில் உள்ள புதர் குன்றில் திடீரென தீப்பற்றி எரிய  தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களே தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனிடையே அந்த மலைப் புதரில் வேண்டுமென்றே தீ வைத்துவிட்டு சென்ற நபரையும், அவரது வாகனத்தையும் வீடியோவாக பதிவு செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த நபரை அடையாளம் கண்டு வேண்டுமென்றே தீ வைத்த குற்ற வழக்குப்பதிந்து கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

Categories

Tech |