மின்னல் தாக்குதலால் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
கனடாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வெப்ப அனல் காற்று வீசி வருவதோடு மின்னல் தாக்குதல்களும் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கனடாவில் கொலம்பியா மாகாணத்தில் 136 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மேலும் ராணுவ விமானங்கள் மூலமும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர். இதனிடையே நேற்று முன் தினம் கொலம்பியா மாகாணத்தில் சுமார் 12 ஆயிரம் மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்றும் குடியிருப்பு பகுதிகளில் மின்னல் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.