உலக நாடுகளின் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பல்வேறு நாட்டு தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிரிட்டனை பொருத்தவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரக்கூடிய நிலையில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதித்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக பார்க்கப்படுகின்றது. சாதாரண நபர்களுக்கு கொரோனா வருவதைப் போலவே தலைவர்களுக்கும் கொரோனா வருவது இயல்பானது தான் என்றாலும் கூட மிகவும் பாதுகாப்பான இடத்தில் , சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய அரண்மனையில் , யாரும் அனுமதி இல்லாமல் நெருங்க முடியாத அளவுக்கு இருந்தும் கூட கொரோனா தாக்கியுள்ளது உலக தலைவர்களையே உறைய வைத்துள்ளது.
ஏற்கனவே பல நாட்டு உலக தலைவர்களை கொரோனா பாதித்துள்ளது. உதாரணத்திற்கு பிரிட்டனின் பட்டத்து இளவரசர் சார்லஸ்க்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதே போல ஈரான் நாட்டின் தலைவர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் மனைவி சோஃபியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த டாக்டருக்கு இந்த தொற்று பரவியதால் அவர் உயிரிழந்தார். இதுபோன்று பல்வேறு தருணங்களில் முக்கிய தலைவர்கள் பலரையும் இந்த கொரோனா பாதித்து உயிர் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது.