Categories
உலக செய்திகள்

பிரதமர் தான் நாடாளுமன்ற ஒத்திவைப்புக்கு காரணம்…. போராட்டத்தில் இறங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்….!!

மலேசியாவில் நாடாளுமன்றம் கூட்ட ஒத்திவைப்புக்கு பிரதமர் தான் காரணம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மலேசியாவில் கொரோனா கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததால் அவசர சட்டம் அறிவிக்கப்பட்டது. இதனிடையே நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட முடிவுகள் குறித்த ஆலோசனைக்காக  நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து மன்னர் ஆலோசனையின்படி கடந்த மாதம் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் தொடங்கியது.

இந்த ஆலோசைனை கூட்டத்தில் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைச் சட்டங்கள் கடந்த 21ஆம் தேதி பெற்றுக் கொண்டுவிட்டதாக சட்ட அமைச்சர் தக்கியுதின் ஹாசன் தெரிவித்தார்.இதனிடையே அவசரநிலை சட்டங்களை திரும்பப் பெற மன்னரிடம் கேட்காததால் அரசாங்கத்தின் மீது அதிருப்தி நிலவி வருவதாக மன்னர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.  இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் பிரதமர் முகைதின் யாசின் தலைமை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதனிடையே கொரோனா வைரஸ் அதிகரித்து வந்ததால் நாடாளுமன்ற கூட்டம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படும் என சபாநாயகர் உத்தரவிட்டார். இந்நிலையில் இது பிரதமர் முகைதின் யாசின் திட்டமிட்ட செயல் எனவும் நாடாளுமன்ற ஒத்தி வைப்புக்கு பிரதமர் தான் காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |