Categories
பல்சுவை

உலகின் மூத்த மொழி… திராவிட மொழிகளுக்குத் தாய்… இறவா வரம் பெற்றுது… தமிழ் மற்றும் தமிழனின் வரலாறு…!!

1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதியை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது ஐநா. மொழிக்காக போராடி உயிர் உயிர் நீத்த பங்காளிகளை நினைவு கூறும் வகையிலும் மொழி ரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும் பன்மொழி வழி கல்விக்காகவும் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது. மொழி போரானது மேற்கு பாகிஸ்தானிலும் தமிழகத்திலும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் எல்லா உயிர்களுக்கும் முதல் உறவாக இருப்பது தாய்தான். மொழியும் அங்கிருந்து தான் தொடங்குகிறது. அதனால்தான் அவற்றை தாய் மொழி என்கிறோம்.

உலக அளவில் மொழி ரீதியான பன்மைத்துவத்தை விவரிக்கும்போது வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழுக்கு மட்டுமே உள்ளது. உலகில் 6000 மொழிகள் தோன்றின என்பதும் அவற்றுள் 2700 மொழிகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன என்பதும் வரலாற்று சான்றாகும். அவற்றுள் தமிழ்மொழி மிகவும் தொன்மையானது என்பதை தனது படைப்புகள் மூலம் உணர்த்தியவர்தான் மொழி ஞாயிறு நா.தேவநேயப் பாவாணர். இவர் நம் தாய் மொழியான தமிழ் மொழியை உயர்த்துவதற்காக அவதாரம் எடுத்து வந்தவர் என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு தமிழின் வேர் சொல் ஆராய்ச்சியில் தலைசிறந்து விளங்கினார்.

Image result for tamil ilakkanam images

உலகில் வேறெந்த மொழிக்கும் இல்லாத வகையில் தமிழ் மொழிக்கும் மட்டும் 16 சிறப்புகள் உள்ளன அவை தொன்மை எண்மை, தூய்மை, தாய்மை, உண்மை, வியன்மை, வளமை, மறைமை, எம்மை, இளமை, இனிமை, தனிமை, ஓன்மை, அம்மை, செம்மை, இறைமை ஆகியவை ஆகும். அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபித்தவர் பாவாணர் ஆவார். ஒப்பியல் மொழி என்னும் நூலில் தொல்காப்பியர் காலத் தமிழ் நூல்களும் கலைகளும் இருந்த பகுதியில் இலக்கணம் பற்றி அவர் கூறும் கருத்தானது கருத்தாழமிக்கது மட்டுமல்ல தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும்.

பிறமொழி இலக்கணங்களில் எல்லாம் எழுத்து, சொல், யாப்பு என இலக்கணத்தை மூன்றாகப் பகுப்பதே பண்டைய வழக்கம். யாப்பும் அணியும் ஒரு செய்யுளின் பொருளை உணர்த்தும் கருவியாகும். அவற்றை பொருள் இலக்கணத்திலிருந்து பிரிக்கக் கூடாது என்பது தமிழ் சான்றோர்களின் கருத்தாகும். பண்டைத்தமிழர் மதிநுட்பம் எல்லாம் பழுத்துக்கிடப்பது பொருளிலக்கணம் ஒன்றில்தான். மக்களின் நாகரீகத்தை காட்ட சிறந்த அடையாளமாக பார்க்கப்படுவது அவர்களின் பேசும் மொழி தான் என்பதை உலகம் ஏற்றுக்கொண்டது.

Image result for harappa moganjatharo tamil nagarigam

பல கருத்துகளை தெரிவிப்பதற்கு கூறிய சொற்களும் சொல் வடிவங்களும் விரிவான இலக்கியமும் ஒரு மொழியின் சிறப்பைக் காட்டும் இலக்கியத்திலும் இலக்கணம் சிறந்தது என்பதை தமிழ் மொழியில் மட்டுமே காண முடியும். உலக மொழிகளுள் தொன்மையானது தமிழ். இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழ். திராவிட மொழிகளுக்குத் தாய் தமிழ். தமிழன் தோன்றிய இடம் குமரிக் கண்டமே. மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரீகம் பழந்தமிழ் நாகரிகம் என்பது பாவாணர் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த அரிய தகவல் ஆகும். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாந மொழி உலகில் வேறெங்கும் இல்லை என்றார் பன்மொழி கற்ற நம் பாரதி.

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். உலகெங்கும் வாழும் மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசி வருகின்றனர். ஆயினும் அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே சிறந்ததாகும் உயர்ந்ததாகும். அது எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதே வேளையில் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி என்று அந்நாளில் பாரதிதாசன் தமிழின் சிறப்புகளை சிறப்புற பாடி உள்ளார்.

Image result for keeladi agalvaraichi muthumakkal thali

உலக மொழிகளுள் தமிழே மூத்த மொழி என்பதை தனது ஆய்வுக் குளத்தின் மூலம் நிரூபணம் செய்தார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். அவற்றிற்கு மேலும் மேலும் வலு சேர்க்கும் வகையில் கீழடி அகழ்வாராய்ச்சியும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு தமிழே மூத்தகுடி என்பதற்கும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாலியே தக்க சான்றாகும். உலக தாய்மொழி தினத்தில் மூத்த மொழியாக விளங்கும் செம்மொழியான நம் தமிழ் மொழி இறவா வரம் பெற்று வாழிய வாழியவே.

Categories

Tech |