Categories
உலக செய்திகள்

பிரெஞ்சு விஞ்ஞானிகளின் நவீன கண்டுபிடிப்பு…. எச்சரிக்கை விடுக்கும் சென்சார் பொருந்திய முகக்கவசம்….!!

90 நிமிடங்களில் கொரோனா வைரஸை கண்டறியும் தொழில்நுட்ப முகக்கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகையே ஆட்டிபடைக்கும்  கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதிமுறைகளில் முகக்கவசம் அணிவது முக்கியமான ஒன்றாகும். இதனிடையே துணி முகக்கவசம், பிளாஸ்டிக் முகக்கவசம் போன்ற பல்வேறு வகையான முகக் கவசங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரெஞ்சு விஞ்ஞானிகள் 90 நிமிடங்களில் கொரோனா வைரஸை கண்டறியும் சென்சார் பொருந்திய முகக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் வைரஸ் நுண்துகள்கள் சென்சாரில் படுவதன் மூலம் வைரஸ் பரவலை எளிதாக கண்டறிய முடியும் என்றும் இதன் மூலம் வைரஸ் பரவலை எளிதாக தடுக்க இயலும் எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |