Categories
பல்சுவை

அர்ப்பணிப்புடன் பணியில் ஈடுபடும் செவிலியர்கள் – உலக செவிலியர் தினம்

உலக நாடுகள் முழுவதிலும் மே மாதம் 12 ஆம் தேதி அன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்களிப்பை நினைவுகூர இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஜனவரி மாதம் 1974ல்  நவீன தாதியியல் முறையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவரது பிறந்த நாளான மே மாதம் 12 ஆம் தேதியை அவரை கவுரவிக்கும் விதமாகவும் நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

வருடம்தோறும் மே மாதம் 12 ஆம் தேதி லண்டனில் இருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் சபேயில் சம்பிரதாயபூர்வமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இங்கிருக்கும் செவிலியர் மாளிகையில் விளக்குகள் ஏற்றப்பட்டு அங்கு அர்ப்பணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் செவிலியர் ஒவ்வொருவருக்கும் கைமாறப்பட்டு அங்கிருக்கும் உயர்பீடம் ஒன்றில் வைக்கப்படும் இது ஒரு செவிலியரிடம் இருந்து மற்றொரு செவிலியருக்கு தமது அறிவை பரிமாறுவதை குறிப்பதாகக் கருதப்படுகின்றது.

Categories

Tech |