Categories
உலக செய்திகள்

ஆண்டுக்கு 400 முறை விண்வெளி சுற்றுலா போவோம்…. இந்த விண்வெளி சுற்றுலாவால் பூமி அழிவது உறுதி…. எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்….!!

தொடர்ந்து அதிகரித்துவரும் விண்வெளி பயணங்கள் ஓசோன் படல பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தரப்பு எச்சரித்துள்ளது.

இங்கிலாந்து விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் கடந்த ஜூலை 11 விண்வெளிப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா என்பவரும் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் தனது குழுவினருடன் நேற்று விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு பூமியை அடைந்தார். இதுகுறித்து  பெசோஸ் கூறுகையில் பிரான்சன்  மேற்கொண்ட பயணத்தை விட 16 கிலோ மீட்டர் அதிகம் பயணம் மேற்கொண்டதாகவும், தன் வாழ்நாளில் கனவு நனவாகியது என்றும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் எனவும் கூறினார்.

இந்நிலையில் விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டுகள் நூறு மடங்கு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடும் என்றும் ராக்கெட் கொண்டுசெல்லும் பாகங்கள் நைட்ரஜன் ஆக்சைடு அதிக அளவு வெளியிடும் எனவும் எனவே உலகம் மிகப் பெரிய அழிவை சந்திக்கும் என விஞ்ஞான தரப்பு எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராக்கெட் தூண்டுதலுக்கு திரவம் மண்ணெண்ணெய், திரவ ஆக்சிஜனும்  பயன்படுத்தப்படுவதால் மேகத்தின் நீராவி ஈர்ப்பு சக்தியை பாதிப்படையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயுகள் ஓசோன் படலம் பாதிப்பு, மழைப்பொழிவு ஆகியவற்றை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரிச்சர்ட் பிரான்சன் குழு ஆண்டுக்கு 400 முறை ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்ப போவதாக அறிவித்துள்ளது குறிபிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அமேசான் நிறுவனம் ஆண்டுக்கு ஆயிரம் முறை சுற்றுலா போகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |