ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீர் தொடர் மழையால் வெள்ளம் வடியாமல் வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே ஜெர்மனி ரைன்லேண்ட்-பேலட்டினேட் நகரில் ஸ்கல்டு பகுதியில் நேற்று பெய்த கனமழையால் 6 வீடுகள் இடிந்து விழுந்தது.
மேலும் 25 வீடுகள் இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. இதனைத்தொடர்ந்து 1,300 பேர் வரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 120-ஐத் தாண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினரும் ராணுவ பணியாளர்களும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பெல்ஜியத்திலும் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் உயிரிழப்புகள் 12 ஆக அதிகரித்துள்ளது என்றும் 5 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.