Categories
உலக செய்திகள்

113-ஆவது பிறந்தநாள்…. உலகிலேயே அதிக வயது கொண்ட நபர்…!!!

உலகிலேயே அதிக வயது கொண்ட நபர் தன் 113வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

வெனிசுலா நாட்டில் வசிக்கும் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா என்னும் நபர் உலகிலேயே அதிக வயது கொண்டவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். தற்போதும் அவர் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு கப் மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்.

இவருக்கு 41 பேரக்குழந்தைகளும் 18 கொள்ளு பேரக்குழந்தைகளும், அதற்கு அடுத்த சந்ததியினரும் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர் தன் 113 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது முதிர்வால், கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. அது தவிர அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்.

Categories

Tech |