Categories
உலக செய்திகள்

உலகிலேயே வயதான பாண்டா கரடி மரணம்…. மலர் கொத்துக்கள் வைத்து அஞ்சலி…!!!

ஹாங்காங் நாட்டில் உலகிலேயே அதிக வயது கொண்ட பாண்டா கரடி உயிரிழந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் உள்ள ஓஷன் பார்க் என்ற வனவிலங்கு பூங்காவில் மிகப்பெரிய பாண்டா கரடி ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. அதன் பெயர் ஆன்-ஆன். உலகிலேயே அதிக வயது கொண்ட அந்த பாண்டா கரடி நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் வயது 35. ஆனால் மனிதர்களின் வயது அடிப்படையில் கணக்கிடும்போது அதன் வயது, 105. தற்போது, உயிரிழந்த அந்த பாண்டா கரடிக்கு தனியாக பூத் அமைத்துள்ளனர். அந்த பூங்காவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மலர்கொத்துக்கள் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

Categories

Tech |