ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி உலக நோயாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு, நோய்வாய்ப்பட்டவர்களுக்காக அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் உலக நோயாளர் தினம் என்பது கத்தோலிக்க திருச்சபையால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை 1992ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11 ஆம் நாளை உலக நோயாளிகள் தினமாக கடைபிடிக்குமாறு கூறியுள்ளார். அவரின் அறிவுரையின்படி போப் ஜான் பால் II அவர்களால் பிப்ரவரி 11ஆம் நாள் உலக நோயாளர் தினமாக அனுசரிக்கப்பட்டது.
இந்த நாளில் நோய்வாய்பட்டவர்களுக்காக அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வர். அதோடு இந்த நாளில் நோய்வாய்ப்பட்டவர்களின் துணை நின்று கடினமாக உழைப்பவர்களுக்காகவும் நேரம் ஒதுக்கி பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும் இந்த உலக நோயாளர் தினத்தில் நிறுவனங்கள் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் ஆன்மிக வழியில் வழிகாட்டுதல்களை போன்றவற்றை வழங்குகின்றன.