Categories
உலக செய்திகள்

கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர்…. ஆதரவாளர்கள் போராட்டம்…. பலி எண்ணிக்கை 212 ஆக உயர்வு….!!

முன்னாள்  அதிபர் ஜேக்கப் ஜூமாஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா விதியின்படி முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவிற்கு  நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஜேக்கப் ஜூமாவை கைது செய்ய கூடாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஜேக்கப் ஜூமா கடந்த வாரம் காவல்துறையினரிடம சரணடைந்ததை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜேக்கப் ஜூமா ஆதரவாளர்கள் நாடு முழுவதும் அமைதியை குலைக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்கா முழுவதும் 25 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் கலவரங்கள் அடங்கி இயல்புநிலை திரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |