இலங்கையில் கறுப்பு ஜூலையை நினைவு கூறும் வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிள் கிழித்தெறியப்பட்டதற்கு தமிழ் தேசிய பண்பாட்டுப் கழகம் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறை கலவரம் மூண்டது. இந்த கலவரத்தை நினைவு கூறும் வகையில் கறுப்பு ஜூலை என்று பெயரிட்டு ஒவ்வொரு ஆண்டும் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் இலங்கை தமிழ் தேசிய பண்பாட்டு கழகம் நினைவு கூறும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.
இதனிடையே இலங்கை ராணுவம் மற்றும் காவல் துறையினரால் அந்த சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழ் தேசிய பண்பாட்டு கழகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அன்று தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதியை அடையாளப்படுத்துவதற்க்கு அரசு தடை போடுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் இதை தமிழ் தேசிய பண்பாட்டு கழகம் வன்மையாக கண்டிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.