இலங்கை சினோபார்ம், பைசர், கோவிட்ஷீல்ட் ஆகிய கொரோனா தடுப்புசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே இலங்கையில் சீனாவின் சினோவேக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில் இலங்கை சீனாவின் மற்றொரு தடுப்பூசியான சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததோடு பைசர், கோவிட்ஷீல்ட்ஆகிய தடுப்பூசிகளும் ஒப்புதல் அளித்துள்ளது. சீனா 1.6 மில்லியன் சினோவேக் தடுப்பூசி இலவசமாக இலங்கைக்கு அனுப்பப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.