சுவிட்சர்லாந்தில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு மக்களை தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள முன்வருமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுவிட்சர்லாந்திலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே தடுப்பூசி போட்டு கொள்ளுதல் குறைந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் 38.6 சதவிகிதத்தினர் வெளிநாட்டு மக்கள் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விசாரணையில் வெளிநாட்டவர்களுக்கு எங்கு தடுப்பூசி போடப்படுகிறது என்று தெரியாததும் அவர்கள் வீட்டிலிருந்து பணிகளை செய்ய முடியாததும் தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் என மாகாண மருத்துவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொது சுகாதாரத்துறை வெளி நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.