ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் சுவிட்சர்லாந்தின் தடுப்பூசி சான்றிதழ்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் பயணிகள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்ககப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதை ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் வெளியிட்டுள்ளது.
மேலும் பயணிகள் கண்டிப்பாக பயண கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் பயணிகள் பிற நாடுகளுக்கு செல்லும் போது அந்தந்த நாட்டில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளது.