பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு நபர்கள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பஞ்சாப் பெரோஸ்பூர் மாவட்டம் இந்திய எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனிடையே பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இரண்டு நபர்களை கண்டறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். இதுகுறித்து பாதுகாப்பு படை வீரர்கள் கூறுகையில் அவர்கள் யார் என்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.