இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள் விமான தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள் விமானங்களுக்கு சில நாடுகள் தற்காலிகமான போக்குவரத்து தடையை அறிவித்திருந்தது. இதனிடையே ஐக்கிய அரபு அமீரகமும் முன்னெச்சரிக்கையாக இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான போக்குவரத்து தடையை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தளர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் நுழைவு அனுமதிச் சீட்டை கண்டிப்பாக பெற வேண்டும் என்றும் பயணிகள் கண்டிப்பாக 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது.