ஜெர்மனில், இரண்டாம் உலகப்போரின்போது போடப்பட்ட வெடிகுண்டுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியிலுள்ள கோர்ட்டிங்கன் நகரின் மையத்தில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் சந்தேகத்திற்கிடமான நான்கு பொருள்கள் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஜெர்மன் ராணுவம் ஆகியோர் அந்த நான்கு பொருட்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அப்பகுதியில் இருந்த 8000 திற்கும் மேற்பட்ட பொதுமக்களை அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பினார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அந்த பொருட்களை ஆய்வு செய்ததில் அவை இரண்டாம் உலகப்போரின்போது போடப்பட்ட வெடிகுண்டுகள் என்பது தெரியவந்தது. அதில் ஒவ்வொரு வெடிகுண்டும் 500 கிலோ எடை கொண்டது. மேலும் அதில் உள்ள ஒரு குண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.