உலகின் மொத்த செல்வ வளமானது, மும்மடங்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில், 20 வருடங்களில் 3 மடங்காக அதிகரித்திருக்கும் செல்வவளத்தில், சீன நாட்டின் செல்வ வளம் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறது. மெக்கின்சி என்ற, உலகிலேயே அதிக செல்வாக்குடைய வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆலோசனையளிக்கக்கூடிய நிறுவனம் தான் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.
உலக செல்வ வளத்தில் 60 சதவீதத்திற்கு அதிகமாக வைத்திருக்கும் ஸ்வீடன், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, மெக்சிகோ, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், செல்வ வளம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், சீனா முதலிடத்தில் இருக்கிறது.
சீனாவில் கடந்த 2000-ஆம் வருடத்தில், செல்வவளம் 7 ட்ரில்லியன் டாலர் இருந்தது. அது, கடந்த வருடத்தில் 120 ட்ரில்லியன் டாலராக அதிகரித்தது. கடந்த 20 வருடங்களில் சீனாவின் செல்வ வளமானது, 113 ட்ரில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. இதே போல், அமெரிக்க நாட்டின் செல்வ வளமானது, 90 ட்ரில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.
உலகின் ஒட்டு மொத்த செல்வவளமானது, கடந்த 2000ஆம் வருடத்தில் 156 ட்ரில்லியன் டாலர் இருந்தது. அது, கடந்த வருடம் 514 ட்ரில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.