திருமணத்திற்குப் பின்பு அண்ணனோடு உல்லாசமாக இருந்த பெண்ணை தம்பி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார்.
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கூலி தொழிலாளி விஜயகுமார். இவருக்கும் சுப்புலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று பத்து வயதில் ஒரு மகள் உண்டு. மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தினால் விஜயகுமார் தனது மகளுடன் வண்ணாரப்பேட்டையில் தாய் வீட்டில் வசித்து வருகிறார் இதனால் சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு வண்ணாரப்பேட்டையில் உள்ள சுப்புலட்சுமியின் தம்பி அக்காவை பார்க்க எர்ணாவூர் சுனாமி பகுதிக்கு வந்துள்ளார்.
நீண்ட நேரமாக கதவை தட்டிய பின் சுப்புலட்சுமி பதற்றத்துடன் கதவை திறந்துள்ளார். வீட்டில் சுற்றுமுற்றும் பார்த்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமியின் சித்தி மகனான ஜானகிராமன் அரைகுறை ஆடையோடு கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரதாப் ஜானகிராமனை சரமாரியாக தாக்கி வீட்டில் அறையில் பூட்டி வைத்தார். சுப்புலட்சுமியை தாக்கிய பிரதாப் தலையணையை வைத்து முகத்தில் அழுத்தி கொலை செய்தார். அதற்கு பிறகு அவரே சென்று போலீசில் சரணடைந்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் சுப்புலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் பூட்டி அடைக்கப்பட்ட ஜானகிராமன் கைது செய்தனர். ஜானகிராமனுக்கு, சுப்புலட்சுமிக்கும் பல ஆண்டுகள் தொடர்பு இருந்ததாகவும், வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் அவர் வந்து செல்வதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்து தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கணவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.