எம்சிசி உலக கிரிக்கெட் குழு கூட்டத்தில் உலக கோப்பை இறுதி போட்டியில் சர்ச்சைக்குள்ளான ஓவர் த்ரோவ் விதி குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நியூசிலாந்து இடையே 2019 உலக கோப்பை இறுதிப் போட்டியின்போது மார்டின் குப்டில் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு திசை திரும்பி பவுண்டரி சென்றது. இதனால் ஓவர் த்ரோவ் விதி அனைவரிடமும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால், இந்த ஓவர் த்ரோவ் போட்டியின் முடிவை மாற்றி அமைத்தது. இதனைதொடர்ந்து எம்சிசி-யின் ஓவர் த்ரோவ் விதியை மறுபரிசீலனை செய்யும்படி முன்னாள் வீரர்கள் உட்பட பலர் வலியுறுத்தினர். இந்நிலையில் ஆகஸ்ட் 11 மற்றும் 12 என இரண்டு நாட்கள் லார்ட்ஸில் முன்னாள் இங்கிலாந்து ஆட்டக்காரரான மைக் கேட்டிங் தலைமையில் எம்சிசி உலக கிரிக்கெட் குழு கூட்டம் நடைபெற்றது.
கிரிக்கெட் குழு கூட்டத்திற்கு பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டியின் போது நடந்த ஓவர் த்ரோவ் சர்ச்சை தொடர்பான சட்டம் 19.8 பற்றி முழுவதுமாக விவாதிக்கப்பட்டது. சட்டம் தெளிவாக இருப்பதாக உலக கிரிக்கெட் குழு உணர்ந்தது. மேலும் இந்த நிகழ்வு குறித்து வரும் செப்டம்பர் மாதம் சட்டத் துணைக்குழுவால் மறுஆய்வு செய்யப்படும் என்று எம்சிசி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.