உலகக்கோப்பை போட்டிக்கு அரையிறுதி சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது கணிப்பை தெரிவித்துள்ளார் .
நாளை முதல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சி ஆட்டங்கள் முடிவு பெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் விதத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் உலக கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் செல்ல வாய்ப்புள்ளது என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இவ்வாறு பதிலளித்துள்ளார் ,
உலக கோப்பையின் லீக் சுற்றானது நாளை முதல் தொடங்க உள்ளது .இந்த லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை கைப்பற்றும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் அதன்படி முதல் 4 இடங்களை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.