தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உலகில் இருக்கும் அழகிய சாலைகளின் புகைப்படங்களை ஹேஷ்டேக்குடன் பதிவிடுமாறு கேட்டிருந்தது.
அதன்படி சுமார் 70 லட்சம் புகைப்படங்கள் பதிவானது. இவற்றில் சாலையின் தூரம் சுமார் 1.6 கிலோ மீட்டரில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள டோர்குவேயையும், ஆலன்ஸ்போர்டு பகுதியையும் இணைக்கக்கூடிய கிரேட் ஓசியன் முதலிடத்தில் இருக்கிறது. சுமார் 8,418 புகைப்படங்களில் இந்த சாலை பதிவிடப்பட்டிருக்கிறது. மேலும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் பிக் சுர் சாலை இரண்டாம் இடம் பெற்றது.
இது சுமார் 5,226 புகைப்படங்களில் இருந்தது. அடுத்ததாக அமீரகத்தின் ஜெபல் ஹபீத் மலை பாதையானது, மூன்றாம் இடம் பெற்றிருந்தது. இந்த சாலை 4840 புகைப்படங்களில் இருந்தது. இதனால் உலக அளவில் அதிகமான மக்களை ஈர்த்த அழகான சாலைகள் என்ற பெருமை இவற்றிற்கு கிடைத்திருக்கிறது.