உலகில் எந்த நாடுகளின் பாஸ்போர்ட் வலிமையானது என்பது தொடர்பான இந்த வருடத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியாகியிருக்கிறது.
வருடந்தோறும் Henly Passport Index என்ற குடிவரவு ஆலோசனை நிறுவனமானது உலகின் பலம் மற்றும் பலவீனமான கடவுச்சீட்டுகளின் தரவரிசையை வெளியிடும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான கடவு சீட்டு தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ள நாடு ஜப்பான் ஆகும். அந்நாட்டின் பாஸ்போர்ட் உலகிலேயே அதிக வலிமையான பாஸ்போர்ட் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் 193 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். சிங்கப்பூர், தென்கொரியா நாடுகள் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கின்றன. இந்த நாடுகளின் கடவு சீட்டுகளை வைத்து 192 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். அதற்கு அடுத்தபடியாக ஜெர்மன் மற்றும் ஸ்பெயின் நாடுகள் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இந்த நாடுகளின் கடவுச்சீட்டுகளை வைத்து 190 நாடுகளுக்கு விசாயின்றி செல்ல முடியும். இத்தாலி, பின்லாந்து, லக்சம்பெர்க் நாடுகள் நான்காம் இடத்தை பிடித்திருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக ஐந்தாம் இடத்தில் நெதர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் ஆஸ்திலியா ஆகிய நாடுகள் இருக்கிறது.
இந்த பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 87-ஆம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவின் கடவுசீட்டை வைத்து உலகின் 60 நாடுகளுக்கு விசாயின்றி செல்லலாம். இதே போல் உலகிலேயே பலவீனமான கடவுச்சீட்டை ஆப்கானிஸ்தான் வைத்திருக்கிறது. பட்டியலில் இறுதியாக 112 ஆம் இடத்தை பிடித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கடவுச்சீட்டை வைத்து விசாயின்றி 27 நாடுகளுக்கு மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முந்தைய இடத்தில் ஈராக் நாடும், 110 ஆம் இடத்தில் சிரியா மற்றும் 109-ஆம் இடத்தில் பாகிஸ்தான் நாடும் இருக்கின்றன.