பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ இருக்கும் புகழ்வாய்ந்த ரீடிமர் சிலையை விட மிகவும் உயரமான ஏசு கிறிஸ்து சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
பிரேசிலில் இருக்கும் ரியோடி ஜெனிரோவில் கர்பூவாடோ மலைத்தொடரில் 1932 ஆம் வருடத்தில் மிகவும் பெரிதான ரீடிமர் இயேசுவின் சிலையை திறந்தனர். மலையின் உச்சியில் சுமார் 120 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்த அந்த இயேசு கிறிஸ்துவின் சிலை தான் உலகிலேயே அதிக உயரம் கொண்ட இயேசு சிலை.
இந்நிலையில் பிரேசிலில் இருக்கும் என்கேந்தடோ என்னும் சிறு நகரில் மிகவும் உயரமான கிறிஸ்து சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 141 அடி உயரம் கொண்ட இந்த சிலை நகருக்கு மேலே மலை ஒன்றில் கான்கிரீட்டின் மூலமாக கட்டப்பட்டிருக்கிறது. இச்சிலை அடுத்த வருடத்தில் மக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.