Categories
உலக செய்திகள்

உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட மரம்.. ஒரு கிலோ மரக்கட்டை 73,000 ரூபாய்.. அப்படி என்ன ஸ்பெஷல்..!!

உலகில் அரியவகை ரத்தினங்களை விட அதிக விலை மதிப்பு கொண்டது அகர் மரம் என்று தெரியவந்துள்ளது.

இந்த அகர் மரமானது, அக்குலேரியா மரத்தின் வழிவகை. இது கற்றாழை மரம் என்றும் கழுகு மரம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தியா, சீனா, அரேபியா, ஜப்பான், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் மலேசியா ஆகியவற்றில் தான் அதிகமாக இம்மரம் காணப்படுகிறது. அதாவது, அமெரிக்க மதிப்பில் இந்த மரத்தினுடைய கட்டைகள், ஒரு கிலோ $1,00,000 ஆகும்.

இந்திய நாட்டின் மதிப்பில், 73 லட்சம் ரூபாய். இந்த மரமானது, நறுமணப் பொருட்கள், மற்றும் வாசனைத் திரவியங்களின் தயாரிப்பிற்கும் பயன்படுகிறது. இந்த மரம் அழிந்து போன பின்பும் அதன் எச்சங்கள் வாசனைத் திரவியம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மரத்திலிருந்து வரக்கூடிய பிசின் மூலம் ஒரு வகையான எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

அதிக விலை கொண்டிருப்பதால் இம்மரத்தை, கடவுளின் மரம் அல்லது கடவுளுக்கு ஏற்ற மரம் என்று அழைக்கிறார்கள். மேலும் இந்த மரத்தை கடத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. எனவே இந்த வகையான மரங்களை அழித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |