பிரிட்டனை சேர்ந்த ஒரு நபருக்கு உலகிலேயே முதன்முறையாக 3d அச்சிடப்பட்ட கண் பொருத்தப்பட்டிருக்கிறது.
லண்டனின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஹாக்னியில் வசிக்கும் ஸ்டீவ் வெர்ஸ் என்ற பொறியாளருக்கு நேற்று முன்தினம் 3d அச்சிடப்பட்ட கண்ணை இடது கண்ணாக மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். இது தொடர்பில், மூர்ஃபீல்ட்ஸ் என்ற கண் மருத்துவமனையானது நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில் நோயாளி ஒருவருக்கு முழுவதுமாக தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக் கண் பொருத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. முற்றிலும் தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்ட இந்த கண் சாதாரணமாகவே தோற்றமளிக்கிறது. இது மட்டுமல்லாமல் தெளிவான கருவிழியினுடைய உண்மையான ஆழமும் இருக்கிறது.
மிக சாதாரணமாக தோற்றமளிக்கும், இந்த கண், குறைந்த ஆக்கிரமிப்பு (less invasive) கொண்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.