Categories
உலக செய்திகள்

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் நபர்… உயிரிழந்த காரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்க நாட்டில் சுவாசக்கோளாறு உடைய நபருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நிலையில் அதில் வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது.

அமெரிக்க நாட்டின் மேரிலேண்ட் நகரில் வசிக்கும் டேவிட் பென்னட் என்ற 57 வயது நபர் இதயத்துடிப்பு சரியாக இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவருக்கு கடந்த ஜனவரி மாதத்தில் பன்றியினுடைய இதயம் பொருத்தப்பட்டது.

இது மருத்துவ உலகிலேயே மிகப்பெரும் சாதனையாக இருந்தது. எனினும் அடுத்த இரண்டு மாதங்களில் டேவிட் பென்னட் மரணமடைந்தார். அவர் உயிரிழந்ததற்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்கள் உடனடியாக கூறவில்லை. இந்நிலையில் தற்போது அவரின் இதயப்பகுதியில் ஆய்வாளர்கள் சோதனை செய்திருக்கிறார்கள்.

அதன்படி அவருக்கு பொருத்தப்பட்டிருந்த பன்றியினுடைய இதயத்தில் டிஎன்ஏ போர்சின் சைட்டோமெகலோ என்னும் வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே,  விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் பட்சத்தில், அது புதிய தொற்றுகளை  ஏற்படுத்திவிடும் என்ற நிலை உண்டாகியிருப்பது கவலையளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |