உலகிலேயே முதல்முறையாக தண்ணீரில் நனைந்தாலும் பாதிக்காத மற்றும் வளையும் திறனுடைய பேட்டரி கனடா ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த பேட்டரியை உருவாக்கியுள்ளனர். மேலும், இதன் மூலம் உடலில் அணியக்கூடிய கருவிகள் சாத்தியமாகியிருக்கிறது என்றும், தெரியாமல் தண்ணீரில் நனைத்து விட்டால் கூட நீடித்து உழைக்க கூடியது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும், இந்த பேட்டரியை இரண்டாக மடிக்கவும் முடியும், இரண்டு மடங்காக இழுக்கவும் முடியும். ஏற்கனவே உடலில் அணியக்கூடிய பேட்டரிகள் பயன்பாட்டில் உள்ளது. எனினும் அவற்றை தண்ணீரில் கழுவ முடியாது. இந்த முக்கிய கண்டுபிடிப்பு, தினசரி பயன்பாட்டிற்கு தேவையானதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், சோதனையின்போது 39 தடவை துணி துவைக்கும் இயந்திரத்தில் இந்த பேட்டரியை போட்டுள்ளனர். எனினும் பேட்டரியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், இது குறைந்த விலை தான் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பேட்டரியை கைகடிகாரங்களில் மற்றும் இதயத்துடிப்பை அறிய இதயத்திற்கு அருகில் வைக்கப்படும் கருவிகளிலும் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.