அக்டோபர் 29 ஆம் தேதியான இன்று சர்வதேச இணைய தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த 2005 ஆம் வருடத்திலிருந்து வருடந்தோறும் அக்டோபர் மாதம் 29- ஆம் தேதி அன்று சர்வதேச இணைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது கடந்த 1969ஆம் வருடத்தில் அக்டோபர் 29ம் தேதி அன்று, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் லியோனார்டு கிளீன்ராக் என்ற பேராசிரியரும் அவரின் மாணவர் சார்லி கிலைன் என்பவரும் இணைய வழியில் இரு கணினிகளுக்கு இடையில் முதல் தடவையாக தகவலை அனுப்பினர்.
அதனை நினைவு கூறும் விதமாகத்தான் சர்வதேச இணைய தினமாக அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், அவர்கள் முதல் தகவலாக ‘Login’ என்னும் வார்த்தை அனுப்புவதற்கு முயன்றனர். ஆனால் l மற்றும் o என்ற எழுத்துக்களை தட்டச்சு செய்த சமயத்தில் கணினி செயலிழந்துவிட்டது.
எனவே, அந்த இரண்டு எழுத்துக்களை மட்டும் முதலில் அனுப்பியுள்ளனர். அதனையடுத்து, ஒரு மணிநேரத்திற்கு பின் ‘Login’ என்று அனுப்பியுள்ளனர். அப்போது தொடங்கப்பட்ட இணைய சேவை, தற்போது மனிதர்களின் வாழ்கையில் இன்றியமையாததாகிவிட்டது.