வியட்நாமில் உலகிலேயே அதிக நீளமுடைய கண்ணாடி பாலம் திறக்கப்பட்டிருக்கிறது.
வியட்நாமில் இருக்கும் சன் லா என்னும் பகுதியில் இரு மலைகளுக்கு நடுவில் சுமார் 492 அடி உயரத்தில் வெள்ளை டிராகன் என்னும் தொங்கும் பாலம் இருக்கிறது. இதன் நீளம் சுமார் 632 மீட்டர் ஆகும். இந்த வெள்ளை டிராகன் பாலத்தில் இருக்கும் கண்ணாடிகள் சுமார் 40 மில்லி மீட்டர் தடிமன் கொண்டிருக்கிறது.
நாள் ஒன்றிற்கு சுமார் 450 நபர்கள் அந்த பாலத்தில் நடக்க முடியும். உலக நாடுகளிலேயே மிகவும் அதிக நீளமுடைய கண்ணாடி பாலம் இது தான். எனவே, இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. நேற்று இந்தப் பாலத்திற்கு திறப்பு விழா நடந்தது. அங்கு, ட்ராகன் நடன நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.