அமெரிக்காவில் உள்ள போர்பஸ் பத்திரிக்கை நிறுவனம் உலக அளவில் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிடும். இந்த பட்டியலானது செல்வம், செல்வாக்கு, ஊடகம் மற்றும் தாக்கம் ஆகிய 4 துறைகளில் இருந்து தயார் செய்யப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு 2-ம் இடத்தை ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லக்ராட்டும், 3-வது அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் இடம் பெற்றுள்ளனர். அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4-வது முறையாக 36-வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோன்று இந்தியாவில் சேர்ந்த எச்.சி.எல் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா 53-வது இடத்தையும், செபி தலைவர் மாதபி புரி பக் 54-வது இடத்தையும், இந்தியா ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 67-வது இடத்தையும், பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் 72-வது இடத்தையும், நியாகா நிறுவனர் பால்குனி நாயர் 89-வது இடத்தையும் பிடித்துள்ளார்.