Categories
உலக செய்திகள்

சொத்து மதிப்பில் உலகிலேயே NO.1…யார்?… எவ்வளவு தெரியுமா?

உலகில் மிக அதிக சொத்து வைத்திருக்கும் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜெஃப் பிசோஸ்.

கொரோனாவால் அமெரிக்கா முழுவதும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வந்தாலும், அமேசானின் பங்குகள் தொடர்ந்து பெரிய உயர்வை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி அமேசான் பங்கு விலை 2.3 சதவிகிதம் அதிகரித்து  சுமார் 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து உள்ளது.

இதனால் ஜெஃப் பிசோஸின் நிகர மதிப்பு  Nike, McDonald’s ,Pepsi ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் மதிப்பை விடவும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரான பில்கேட்சை விடவும் சுமார் 6 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உலகிலேயே  15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நிகர சொத்து மதிப்பு இருக்கும் முதல் நபராக அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் உருவாகியுள்ளார்.

Categories

Tech |