ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாரா பகுதியில் விஸ்வாஸ் ஸ்வரூபம் என்று அழைக்கப்படும் உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் சுமார் 351 அடி ஆகும். கடந்த 10 வருடங்களாக சிவன் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த சிலை நாளை திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலையை முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆன்மீக போதகர் மொராரி பாபு திறந்து வைக்கிறார்.
இதேபோன்று குஜராத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு 567 அடி உயரத்தில் மிகப்பெரிய சிலை எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் உலகின் மிக உயரமான சிவன் சிலை ஜெய்ப்பூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.