Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா – உலகளவில் உயிரிழப்பு 55 ஆயிரத்தை தாண்டியது; 10.39 லட்சம் பேர் பாதிப்பு!

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,163 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் பலி எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகள் தான் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55,163ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலி – 13,915, ஸ்பெயின் – 10,935, அமெரிக்கா – 6,095, பிரான்ஸ் – 5,387 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 10.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2.20 லட்சம் பேர் குணமடைந்தனர்

Categories

Tech |