கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் அஞ்சி நடுங்கிக்கொண்டு இருக்கின்றது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 3,062,054 பேர் பாதித்துள்ளனர். 211,433 பேர் உயிரிழந்த நிலையில், 921,166 பேர் குணமடைந்துள்ளனர். 1,929,455 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 56,293 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் விளைவுகளை சந்தித்துள்ளது.
தினமும் கொத்துக்கொத்தாக மரணம் ஏற்பட்டு வருவதால் சொல்ல முடியாத துயரை அமெரிக்கா சந்தித்து வருகின்றது. அமெரிக்காவில் மட்டும் 1,010,123 பேருக்கு கொரோனா ஏற்பட்டு 56,796 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக
ஸ்பெயின் பாதிப்பு – 229,422 , உயிரிழப்பு – 23,521
இத்தாலி பாதிப்பு – 199,414, உயிரிழப்பு – 26,977
பிரான்ஸ் பாதிப்பு – 165,842, உயிரிழப்பு – 23,293
ஜெர்மனி பாதிப்பு – 158,758, உயிரிழப்பு – 6,126
பிரிட்டன் பாதிப்பு – 157,149, உயிரிழப்பு – 21,092
துருக்கி பாதிப்பு – 112,261, உயிரிழப்பு – 2,900
ஈரான் பாதிப்பு – 91,472, உயிரிழப்பு – 5,806