உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிந்தவர்கள் எண்ணிக்கை 21,283ஆக உயர்ந்துள்ளது. 4,71,060 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்1,14,218 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனாவால் ஒரே நாளில் 247 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிதாக 13,347 பேருக்கு கொரோனா உறுதியானதால் அமெரிக்காவில் மொத்தம் 68,203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,268 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.