Categories
உலக செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை : உலகளவில் 19 ஆயிரத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா வைரசால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 19, 100 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரசால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 19, 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,28,193 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 1,09,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இத்தாலி, ஈரான், ஸ்பெயின், அமெரிக்கா, பிரேசில்  ஆகிய நாடுகளில்  நாளுக்குநாள் பலி எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக உயிரிழப்பை சீனா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |