கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கதிகலங்க வைத்துள்ளது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரசை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
சர்வதேச அளவில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 7, 37, 577 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,56,280பேர் குணமடைந்துள்ளனர்.