Categories
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியது!

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரை 48,135 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,46,875 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 2,00,317 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6,00,098 ஆக உள்ளது.

உலகளாவிய பெரும் தொற்று நோய் என அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயின் நாட்டில் 616 பேர் பலியாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக ஸ்பெயின் நாட்டில் மட்டுமே 10,003 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தூண்டியுள்ளது. உலக நாடுகளில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்க தான். அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அங்கு மொத்தம் 2,00,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 5,112 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,000 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை (1,10,574) தூண்டியுள்ளது. இத்தாலியில் தான் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 13,155 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் தான் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள்.

Categories

Tech |