Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கதிகலங்க வைத்துள்ளது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரசை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

சர்வதேச அளவில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,23,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,51,824 பேர் குணமடைந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் விவரங்கள் :

நாடுகள்       உயிரிழப்பு       பாதிக்கப்பட்டவர்கள்     குணமடைந்தவர்கள் 

இத்தாலி           10,779                            87, 689                                            13,030
ஸ்பெயின்        6,803                            80,110                                              14,709
சீனா                     3,304                             81,470                                               75,700
ஈரான்                 2,640                              38,309                                               12,391
பிரான்ஸ்          2,606                              40,174                                                 7,202
அமெரிக்கா      2,485                             1,42 637                                              4,559

 

Categories

Tech |