உலகையே மிரட்டிவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹானில் மட்டும் 90 பேர் இறந்துள்ளதாக, சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் மட்டும் கொரோனா வைரஸிற்கு புதிதாக 397பேர் பாதிப்படைந்துள்ளதாக சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பில் 2,345 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சீனாவில் மட்டும் மொத்தம் 76,288 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.