Categories
உலக செய்திகள்

உலகளவில் 30 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… இதுவரை 2 லட்சம் பேர் பலி..!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 30,03,229 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,07,094 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 82 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது.

இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. இந்த நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான். இங்கு தினமும் கொத்து கொத்தாக மக்கள் கொரோனாவுக்கு மடிந்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமேரிக்காவில் மொத்தம் 1,330 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகள் 55,415 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,87,322 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது, 1.18 லட்சமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து ஸ்பெயினில் 226,629 பேரும், இத்தாலியில் 197,675 பேரும், பிரான்சில் 162,100 பேரும், ஜெர்மனியில் 157,770 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |