உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதிலும் சுமார் 53,03,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 3,39,992 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையானது 21,58,514ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸால் அமெரிக்கா தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் தற்போது வரை 16,54,094 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97,647ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் – 3,26,448 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு இதுவரை 3,249 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 2,81,904 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 28,628 பேர் பலியாகியுள்ளனர். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,32,328ஆக உயர்ந்துள்ளது. 21,116 பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டனில் 36,393 உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 2.54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.