Categories
மாநில செய்திகள்

மோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……!!

ராஜிவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை காவல்துறை கைது செய்ய வேண்டுமென்று H.ராஜா தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

சீமானின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில், அவர் மீது பாஜகவின் தேசிய செயலாளர் H. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் , ராஜீவ் கொலை தொடர்பான சீமான் பேச்சு அரசியல் ஓட்டுக்காக , தமிழ் மக்களை , தமிழ் உணர்வுகளை தவறாக தூண்டி விடுவதாக தெரிவித்த அவர் ,  சீமான் போன்ற சில மோசமான பிரிவினைவாத சக்திகளை அரசாங்கமும் , காவல்துறையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |