சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ரூ4,000 கோடி மதிப்பில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழக அரசின் தொழில்துறைக்கும் பிரபல CEAT டயர் நிறுவனத்திற்கும் இடையே ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள மதுராமங்கலத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ஆம் ஆண்டு கையெழுத்தானது. இந்திய நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான CEAT, டயர் மற்றும் டயர் சார்ந்த பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை, ரூ4,000 கோடி செலவில் அமைக்கவுள்ளது.
இந்த தொழிற்சாலை மூலம் நேரடியாக 1,000 பேருக்கும், மறைமுகமாக 10,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இந்தத் தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நாளை தொடங்கிவைக்க உள்ளார். சில மாதங்களுக்கு முன் ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினை முதலமைச்சர் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.