Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள் மாநில செய்திகள்

எஸ்வி சேகர் வழக்கு… “ஏன் ஃபார்வேடு செய்தீர்கள்”… ரத்து செய்ய முடியாது.. நீதிமன்றம் அதிரடி..!!

படிக்காமல் ஃபார்வேடு செய்துவிட்டு  மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா? எஸ்.வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பெண் பத்திரிக்கையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகரான எஸ்.வி சேகர் 2018 ஆம் ஆண்டு முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலரும் புகார் மனு அளித்திருந்தனர்.. அதன் அடிப்படையில், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எஸ்.வி சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கு இன்று நீதிபதி நிஷா பானு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது எஸ்.வி சேகர் தரப்பில் அந்தப் பதிவை படிக்காமல் ஃபார்வேடு செய்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறப்பட்டது..

அதற்கு நீதிபதி படிக்காமல் ஃபார்வேடு செய்து விட்டு மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?  என்று கேள்வி எழுப்பினார்.. மேலும் மனுதாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்யுமாறு கூறப்பட்டது.. ஆனால் நீதிபதி வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்..

Categories

Tech |