Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இத சாப்பிட்டால் ஆண்களுக்கு போயிருமா…! அய்யோ

பலரும் மீல்மேக்கரை எதிலிருந்து கிடைக்கிறது என்று இல்லாமலே உணவில் பயன்படுத்தி வந்திருப்போம். சோயாபீன்ஸ் ( மீல் மேக்கர்)  எதிலிருந்து கிடைக்கிறது,  இதை சாப்பிடலாமா ? இதன் நன்மைகள் என்ன ? தீமைகள் என்ன ? யாரெல்லாம் சாப்பிடலாம் ? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ? இப்படியாக  மீல் மேக்கர் பற்றிய சில விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

மீல்மேக்கர் என்பது ஒரு உணவுப் பொருள் தான். இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். இது சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு பொருளை தயாரித்து விற்ற ஒரு  கம்பெனியின் பிராண்ட் பெயரிலேயே இதனை மேல் மீல்மேக்கர் என்று அழைத்து வருகிறோம்.

இது கடினமான நிலையில் இருக்கும் வெஜிடேரியன் புரதம் என்று சொல்லலாம். சோயா பீன்ஸில் இருந்து பல பொருட்கள் கிடைக்கிறது. சோயா பால், சோயா புரதம், சோயா எண்ணெய் என பல பொருட்களை சொல்லலாம். குறிப்பாக சோயா எண்ணெய் தயாரிக்கும்போது அதனை பிழிந்து எடுத்து விடுகிறார்கள். அதன்பிறகு சக்கை அல்லது புண்ணாக்கு கிடைக்கும் அல்லவா ? இப்படி கிடைக்கக்கூடிய பொருள்தான் இது.

இறைச்சி துண்டு மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக சின்ன, சின்ன துண்டுகளாக கட் பண்ணி அதை பாக்கெட்டில் அடைத்து மீல் மேக்கர் என்று சொல்லிவிட்டார்கள். ஒருவர் சைவ உணவை மட்டுமே சாப்பிடும் பழக்கம் உடையவர் என்றால் அவர் இறைச்சியின் சுவையை அனுபவிக்க விரும்பினால்,  சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்பட்ட மீல்மேக்கர் ஒரு சரியான சாய்ஸ்.

இதில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இதை இறைச்சிக்கு சமமாக நாம் கருதலாம். இந்த மீல் மேக்கர் உணவுகள் இறைச்சி உணவுக்கு மிகச் சிறந்த மாற்று உணவு. யாரெல்லாம் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து,  சாப்பிட பிடிக்கவில்லையோ அவர்கள் இந்த சோயா சார்ந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது இறைச்சியில் இருந்து பெறக்கூடிய சத்துக்களை பெறமுடியும்.

இன்னும் சொல்லப்போனால் இந்த மீல்மேக்கர் 1980களில் கல்யாண விருந்துகளில் வெஜ் பிரியாணிகளில் தென்பட ஆரம்பித்தது. இதனுடைய சுவை பிடித்துப்போனதால் இதனை பலரும் கடைகளில் தேடிப்பிடித்து, சமைக்க ஆரம்பித்தார்கள். வெஜ் பிரியாணி செய்யும்போது பீன்ஸ், கேரட், பட்டாணி கூடவே  சோயாவும் கண்டிப்பாக இருக்கும்.

புரதச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு ஒரு நல்ல மருந்து என்று சொல்லலாம். சோயாவை அவ்வப்போது சீரான இடைவெளி விட்டு சமையல் சேர்த்து வரலாம். சோயாபால், சோயா சீஸ் என  அனைத்திலும் புரதச்சத்து அதிகம் உள்ளது. தானிய வகைகளில் சோயாவில் தான் அதிகமான புரோட்டீன் இருக்கிறது. 100 கிராம் சோயாவில் 28.6 கிராம் புரோட்டின் இருக்குது.

இந்த புரோட்டின்ல நம்ம உடலுக்கு தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்கிறது. மாமிச புரோட்டின் இணையாக வரக்கூடிய ஒரே சைவ புரோட்டின் சோயா பீன்ஸ் தான். அப்படி இருந்தாலும் சோயாவில் கொழுப்பு குறைவாகவே இருக்கிறது. இதில்  20 கிராம் கொழுப்புதான் இருக்கிறது.எனவே சோபாவில் கார்போஹைட்ரேட் அளவு ரொம்ப ரொம்ப கம்மிதான் இருக்கும்.

சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த, சோர்வடைந்த, இருதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு ரொம்பவே முக்கியமானது. சோயா சுலபமாக எலும்புகளுக்கும், பற்களுக்கும் பாதுகாப்பு வழங்கும். இது தவிர சோயாவில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தையும், ஆரோக்கியமாக வைத்திருக்கும்.எவ்வளவுதான் நன்மை தந்தாலும் அளவுக்கதிகமாக இதை எடுத்துக் கொள்ளும் போது இது நம்முடைய உடலில் பாதிப்பை உண்டாக்கும்.

ஏற்கனவே சொன்ன மாதிரி மீல்மேக்கரை முக்கிய பொருள் சோயாபீன்ஸ். இந்த சோயா பீன்ஸ் பருப்பு குடும்பத்தைச் சார்ந்தது. உங்களுக்கு பருப்பு சார்ந்த உணவு பொருட்கள் அலர்ஜி ஒத்துக்காது அப்படின்னா… நீங்க மீல்மேக்கர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து அதிகப்படியான சோயா உணவு பொருட்களை எடுத்து கொண்டால் அது உங்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும் .

அதே போல உங்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பது இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் உண்டாக்கிவிடும். இது தவிர தைராய்டு சுரப்பி ஒழுங்காக வேலை செய்ய விடாது. தேவையான அளவு அப்போது இந்த மீல்மேக்கரை எடுத்துக்கொள்வது பிரச்சனை இல்லை.

Categories

Tech |